ஏற்ற வேளை என்னை உயர்த்துவீரே
யெகோவா தெய்வம் நீரே
ஏற்றவேளை என்னை போஷிப்பீரே
யொகோவா தெய்வம் நீரே
1. கேரீத் ஆற்றங் கரையினிலே
தீர்க்கன் எலியாவின் பசியறிந்து - 2
இறைச்சியையும் அப்பத்தையும்
காகம் கொண்டு போஷித்தீரே - ஏற்றவேளை என்னை
2. ஆடுகள் மேய்த்த தாவீதின்
இருதயத்தின் தாகமறிந்து - 2
அரசனாக அபிஷேகித்தீர்
அரியணையில் அமரவைத்தீர் - ஏற்றவேளை என்னை
3. குழியில் தள்ளப்பட்ட யோசேப்பின்
ஒழுக்கம் நிறைந்த வாழ்வை அறிந்து - 2
எகிப்து தேசம் அனைத்திற்குமே
அதிகாரம் தந்து ஆசீர்வதித்தீர் - ஏற்றவேளை என்னை
4. எல்லா உயிர்களின் கண்களுமே
உம்மை நோக்கி பார்க்கின்றதே - 2
ஏற்ற வேளையில் அவைகளுக்கு நீர்
ஆகாரத்தைத் தருகின்றீரே - ஏற்றவேளை என்னை