ஏழையின் ஜெபத்தை கேட்கிற தேவன்
ஏழை என் ஜெபம் கேளுமே - 2
என் விண்ணப்பங்கள் என் வேண்டுதல்கள்
உம் சமூகத்தில் சேர்வதாக - 2
1. ஆகாரின் கண்ணீரைக் கண்டு
அழுகையை போக்கினை தேவன் - 2
அழுதிடும் எந்தன் வேதனை நீங்க
அருள்மறை பொழிந்திடுமே - 2
2. தானியேல் கூப்பிட்டபோது
தட்டாமல் பதிலளித்தீர் - 2
தம்மை நோக்கி கூப்பிடும் எனக்கு
தப்பாமல் பதில் தாருமே - 2
3. இறங்கும் என்ற பர்திமேயு
இறங்கியே கண்களை திறந்தீர் - 2
தீராத வியாதியாம் வருந்திடும் எனக்கு
தீவிரமாய் இறங்கும் - 2