துதிப் பாடல்கள்

எழும்பி பிரகாசி என் மகனே

Ezhumbi Piragaasi En Maganae

எழும்பி பிரகாசி என் மகனே(ளே) (ஏசாயா 60:1)

உன் ஒளி வந்தது மகிமை உதித்தது

மகிமை உன் மேல் உதித்தது

நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் (ஏசாயா 60:15)

ஒருவரும் கடந்து நடவாததாய்

நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்

அலங்கரிப்பாரே உன்னை

சூரியன் வெளிச்சம் தரவில்லையோ (ஏசாயா 60:20)

உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்

தேவனே உனக்கு மகிமை

பூமியையும் இருள் மூடியதோ (ஏசாயா 60:2)

ஜனங்களை காரிருள் மூடியதோ

மகிமை உன்மேல்

வெளிச்சமே நீ தான்

(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்

எழும்பி பிரகாசி எதிர்காலமே

உன் ஒளி வந்தது மகிமை உதித்தது

மகிமை உன் மேல் உதித்தது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு