துதிப் பாடல்கள்

இக்கட்டு நாளில் கர்த்தர் நமக்கு

Ikkattu Naalil Karthar Namakku

இக்கட்டு நாளில் கர்த்தர் நமக்கு அடைக்கலமவரே

யெகோவா தேவன் நம் வாழ்க்கைக்கு துணையாய்

இருப்பவரே

அவரை நம்பிடுவோம் அவரை உயர்த்திடுவோம்

அவரில் மகிழ்ந்திடுவோம் அன்பாய் பாடிவோம் (இக்கட்டு நாளில்)

1. துன்பம் நம்மை சூழ்ந்து கொண்டால்

துணையாய் அவர் இருப்பார்

இன்பம் தந்து இறைவனாய் இருந்து

நம்மை நடத்தி செல்வார் (இக்கட்டு நாளில்)

2. உள்ளம் கையில் வரைந்தவரை எந்நாளும் மறவாதே

இயேசு என்றும் உன்னோடு -இருப்பார்

ஒரு நாளும் கலங்காதே (இக்கட்டு நாளில்)

3. அனாதை என்று சொல்லாதே - அவர் எல்லாமே

அறிவார்

ஆவதும் அழிவதும் அவராலே

என்பதை உணர்ந்து கொள்வாய் (இக்கட்டு நாளில்)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு