இலங்கை தேசத்திலே அழிவு உருவானதே... - 2
இரட்சகர் இயேசுவே இலங்கைக்கு வாருமே... - 2
அமைதியை தாருமையா - நல்ல
அமைதியை தாருமையா (இலங்கை...)
இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு
நடத்தி கொண்டு சென்றீர்... - 2
இலங்கை மண்ணிலே இடம்பெயர்தோர்களை
சொந்த இடங்களுக்கு கொண்டுபோய்விடும்... - 2
தாய்தந்தை ஓரிடத்தில் பிள்ளைகள் ஓரிடத்தில்
உறவுகள் வேறோர் இடத்தில்... - 2
எல்லாரும் மீண்டும் சேர்ந்து நன்றாய் வாழவேண்டும்
ஒன்றாய் கூடிவாழ கிருபைசெய்யும்... - 2
எங்கும் அவல நிலை தினமும் கூக்குரல் தான்
கவலை கண்ணீருமே... - 2
எல்லா மக்களும் நற்செய்தி கேட்டுமே
அமைதியை பெற்று வாழ கிருபை செய்யும்