இந்த இரவை இன்பமாய்க் காணச்
செய்த தேவனை நாம் ஸ்தோத்திரிப்போம்
சென்ற பகல் முழுவதிலும் நம்மை -2
க்ஷேமமுடன் பாதுகாத்த தேவனை -2
1.இந்த இரவிலும் இயேசுவே உம்மை
இன்பமாய்ப் பாடக் கிருபை செய்திரே
இரவிலும் ஆத்துமா உம்மை வாஞ்சித்து - 2
இன்பமாய் இருக்க நீர் கிருபை செய்வீரே - 2
2. இந்த இரவிலும் இயேசுவே உம்மைக்
கெஞ்சி மன்றாடக் கிருபை செய்வீரே -2
கண்ணீர் விட்டு விண்ணப்பம் பண்ணி -2
வேண்டுதல் செய்யவும் கிருபை செய்வீரே -2
3.பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டும்
சிறையின் தொழுமரத்தில் மாட்டப்பட்டும்-2
நடுராத்திரியில் ஜெபம் பண்ணி -2
உம்மைத் துதித்துப் பாடக் கிருபை செய்தீரே -2
4. பவுல் சீலா ஜெபத்தைக் கேட்டு
பூமியை மிகவும் அதிர்ச் செய்து -2
சிறைச்சாலையின் கதவுகள் திறக்கவும் -2
கட்டுகள் கழலவும் கிரியை செய்தீரே -2
5. இரவில் பேதுரு சிறைச்சாலையில்
கொலைக்காய் அடைக்கப்பட்ட போது -2
சபையார் அநேகர் கூடி அவனுக்காய் -2
ஊக்கமாய் ஜெபிக்கக் கிருபை செய்தீரே -2
6. ஊக்க ஜெபத்தை உடனே கேட்டு
உடனே உம் தூதனை நீர் அனுப்பி -2
உம் தாசனாம் பேதுருவை -2
உடனே விடுவித்த எங்கள் தேவனே - 2
7. இரவில் உண்டாகும் உம் அக்கினியிலும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் -2
இயேசுவே எம்மை விலக்கிக் காத்து -2
காலையைக் களிப்புடன் காணச் செய்வீரே -2
8. இயேசுவே இரவில் உம் அக்கினியிலும்
பகலில் உம் மேகத்திலும் முன்சென்று -2
இஸ்ரவேலரை நீர் பாதுகாத்தது போல் -2
எம்மையும் எப்போதும் பாதுகாத்தருள்வீர் -2