இன்று உங்களுக்கு தாவீதின் ஊரில்
தேவ மைந்தன் இயேசு பிறந்துள்ளார்... - 2
நற்செய்தி! இது நற்செய்தி!
எல்லாருக்கும் இதுவே நற்செய்தி! - 2
பரிசுத்த ஆவியால் கன்னியின் வயிற்றிலே
கரு உருவாகியே கர்த்தர் பிறந்தார்
காவிய நாயகன் கருணை தேவன்
மானிடரானார் பாவியை மீட்க... - 2
நற்செய்தி! இது நற்செய்தி!
எல்லாருக்கும் இதுவே நற்செய்தி!
அன்பினால் தூதரும் பாடியே மகிழ்ந்திட
மந்தை மேய்ப்பரும் துதித்துப் போற்றிட... - 2
உன்னதமானவர் உலகினில் உதித்தார்... - 2
இம்மானுவேலர் நம்மோடிருப்பர்... - 2
நற்செய்தி! இது நற்செய்தி!
எல்லாருக்கும் இதுவே நற்செய்தி!...2
அந்தகார இருளுமே நம்மை விட்டு அகன்றிடும்
ஆனந்தமான வாழ்வு மலர்ந்திடும்... - 2
அல்லேலூயா பாடி நாமும் மகிழ்கொண்டாட... - 2
ஆர்ப்பரிப்போம் நாம் ஆனந்தமாக... - 2