துதிப் பாடல்கள்

இன்னும் உறக்கத்தில் சென்றாயோ

Innum Urakkathil Sendraayo

இன்னும் உறக்கத்தில் சென்றாயோ

அந்த நேரத்தில் என்னை நீ மறந்தாயோ

நான் உறங்குவதும் இல்லையே

உனக்காய் தூங்குவதும் இல்லையே-2

அதிகாலை நேரத்தில் பரம அதிகாரம் கொடுக்கவே

ஆத்தும பாரத்தில் நான் ஆர்வமாய் வருகையில்-2

இன்னும் விழிக்கவில்லை எழுப்ப மனமுமில்லை

எந்தன் ஏக்கம் உன்னில் புரியவில்லை-2

உன்னைக் காத்திடும் தேவனை

நீ காத்திட வைப்பதேன்-2

தீட்டிய பட்டயம் அது உறையிலே கிடக்குது

வழி காட்டிய வேதமும் உள்ளறையிலே இருக்குது-2

உன்னில் ஜெபமுமில்லை உறக்கம் கலையவில்லை

என்னை நினைத்திடவும் நேரமில்லை-2

அந்த சிலுவையின் வேதனை

என்னை மறுபடி நெருக்குதே-2

காகிதப்பூக்களாய் நீ கசங்கியே போவதேன்;

காலத்தில் பாதியை நீ தூங்கியே கழிப்பதேன்-2

இன்னும் உறக்கமென்ன எழும்ப தயக்கமென்ன

இப்படி வாழ்கிறதில் அர்த்தமென்ன-

நீ படுத்துத் தூங்கவா

என்னைக் கொடுத்துத் தாங்கினேன்-2

நித்திரை செய்கையில் அந்த சத்துரு வருகிறான்

உன் சத்துவம் குலையவே பெரும் வேதனை தருகிறான்-2

இனியும் வார்த்தையில்லை துளியும் நேரமில்லை

எழும்பு என்மகனே எழுந்துவிடு-2

உன் ஒருவனைக் கொண்டுதான்

அந்த பகைவனைத் துரத்துவேன்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு