துதிப் பாடல்கள்

இரவும் பகலும் கதறி ஜெபிக்க

Iravum Pagalum Kadhari Jebikka

இரவும் பகலும் கதறி ஜெபிக்க

கண்ணீராவி தாருமே

ஆத்ம பாரம் நிறைந்து ஜெபிக்க

உந்தன் இதயம் வேண்டுமே

ஆத்ம பாரம் நிறைந்து ஜெபிக்க

உந்தன் இதயம் வேண்டுமே

சிலைக்கு முன்னால் ஒரு கூட்டம்

சிலையைப் போல நிற்கிறது

சிலைக்குப் பின்னால் ஒரு கூட்டம் சிலையைப்

போல கிடக்கிறது காதுகளிருந்தும் கேட்காமல் கண்கள்

மூடி அலைகிறது

காதுகளிருந்தும் கேட்காமல் கண்கள்

மூடி அலைகிறது

தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே

திரைக்கு முன்னால் ஒரு கூட்டம் பொய்யாய் வாழ்ந்து மறைகிறது

திரைக்குப் பின்னால் ஒரு கூட்டம் பொய்யாய் வாழ்ந்து மடிகிறது

இதையே அறியாமல் ஒரு கூட்டம் இதைப் போல் வாழ துடிக்கிறது

இதையே அறியாமல் ஒரு கூட்டம் இதைப் போல் வாழ துடிக்கிறது

தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே

கொடிக்கு முன்னாள் ஒரு கூட்டம் கொடியை ஏந்தி அலைகிறது

கொடிக்குப்பின்னால் ஒரு கூட்டம் கொள்கைக்காக மடிகிறது

தேவனை சார்ந்து வாழாமல் மனிதனை நம்பி மயங்கிடுதே

தேவனை சார்ந்து வாழாமல் மனிதனை நம்பி மயங்கிடுதே

தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு