இஸ்ரவேலின் ஜெய பெலனெ ஸ்தோத்திரம்.
எங்கள் குல ராஜனே -ஸ்தோத்திரம்
மகிமை உள்ள கர்த்தாவே - ஸ்தோத்திரம்
மனதார துதிப்பேன் நான் எந்நாளும்
ஆஹா என் உள்ளம் பாடுது
என் ஆண்டவரை - தினம் தேடுது
பாசம் காட்டி அழைத்தீரே ஸ்தோத்திரம்
பக்குவமடைய செய்தீரே ஸ்தோத்திரம்
பரலோக ராஜ்ஜியத்திற்கு
பங்காளியாய் மாற்றினீரே ஸ்தோத்திரம்
தேடிவந்த தேவனே -ஸ்தோத்திரம்
தேற்றி ஆறுதல் தந்தவரே ஸ்தோத்திரம்
வாடி நின்ற எங்களுக்கு -வார்த்தையாகி
பேசினீரே -ஸ்தோத்திரம்