ஜீவனுள்ள ஜீவனுள்ள தேவா
நேசமுள்ள நேசமுள்ள ராஜா
உங்களோடு உங்களோடு நான் இருப்பேன்
உங்களையே உயர்த்திடுவேன்
உங்களோடு உங்களோடு நான் இருந்து
உங்களைப்போல் வாழ்ந்திடுவேன்
பாடுகின்ற பாடுகின்ற
நாவை எனக்கே நீர் தந்தீர்
தேடுகின்ற தேடுகின்ற
மனதை எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு)
பக்தியுள்ள பக்தியுள்ள
மனதை எனக்கே நீர் தந்தீர்
அறிவுள்ள தெளிவுள்ள
வார்த்தை எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு)
சுத்தமுள்ள சுத்தமுள்ள
இதயம் எனக்கே நீர் தந்தீர்
பரிசுத்த பரிசுத்த ஆவியை
எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு)