காலை தோறும் கிருபையால் புதிதாகின்றேன்
மாலை தோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றேன் -2
கர்த்தாவே உம் கிருபை பெரியது
கர்த்தாவே உம் இரக்கம் பெரியது -2
Hallellujah -8
1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக
நன்றிபலி இடுவேன்
உமது நீதி நியாயத்தின் நிமித்தம்
ஏழு முறை துதிப்பேன் -2
2. ஆபத்து நேரம் தப்புவித்தீரே
நன்றிபலி இடுவேன்
இக்கட்டு நேரம் விடுதலை தந்தீர்
ஏழு முறை துதிப்பேன் -2
3. கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீர்
நன்றிபலி இடுவேன்
தேவைகள் அனைத்தும் மிகுதியாய் கொடுத்தீர்
ஏழு முறை துதிப்பேன் -2