கானானுக்கு புறப்படு நீ
கர்த்தரின் தூய வாக்கின்படி
எதற்குமே நீ கலங்கிடாதே
வனாந்திரமாகிலும் நடத்திடவே
யெகோவா தேவன் உன்னோடிருப்பர்
யெகோவா தேவன் உன் பெலனாய் இருப்பார்
நீ சோர்ந்து போகாதே முன்னேறி சென்றிடு
சேனைகளின் கர்த்தர் உன்னுடனே
ஒரு சேதமும் இன்றி காப்பாரே
செங்கடல் பிளந்து வழி விடுமே
யோர்தான் பின்னோக்கி ஓடிடுமே
உன்னதமானவர் உன்னுடனே
உயர் மறைவில் வைத்து காப்பாரே
வானமும் மன்னா பொழிந்திடுமே
கன்மலை நீரை சுரந்திடுமே
திரியேக தேவன் உன்னுடனே
எந்த தீங்கும் அணுகிட காப்பாரே
தேவனின் சமூகம் முன்செல்லுமே
தேசங்கள் உன்னை கண்டு நடுங்கிடுமே