துதிப் பாடல்கள்

கார்மேகம் கண்ணில்

Kaarmegam Kannil

கார்மேகம் கண்ணில் தெரியுதே

பெருமழையின் இரைச்சல்

காதில் கேட்குதே

எழுப்புதல் தேசத்தில்

எங்கும் பரவுதே

எழும்பிடுவோம் தேவனின்

யுத்த வீரரே

ஜெபித்திடுவோம்

செயல்படுவோம்

துதித்திடுவோம்

தேசத்தை சொந்தமாக்குவோம்

1) ஆதி சபை அற்புதங்கள்

அதிகம் நடக்குமே

ஆதி அன்பு விசுவாசம்

நம்மில் பெருகுமே

2) அறுவடை களத்திலே

அறுப்பு அதிகமே

அறுவடைக்கு ஆட்களோ

தேவை மிகுதியே

3) பாகாலின் பீடங்கள்

தகர்ந்து போகுமே

கர்த்தரே தெய்வமென்ற

சத்தம் கேட்குமே

4) இந்தியரின் வாய்கள்

தினம் வசனம் பேசுமே

இந்தியாவின் எழுப்புதலை

உலகம் பேசுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு