துதிப் பாடல்கள்

காத்திருந்தேன் காத்திருந்தேன்

Kaathirundhen Kaathirundhen

காத்திருந்தேன்,காத்திருந்தேன்-கண்கள் பூத்தது

கானகத்து தேவனைக் கண்டு கண்கள் குளிர்ந்தது -2

நேசரே -வா வா வாஞ்சையை தா,தா

வேதத்தை தியானிக்க வல்லமையை பெற்றுக்கொள்ள

காத்திருந்தேன் -2

1.ஞானம் என்பது நமக்கு இல்லையே

அறிவு என்பது அறிந்துக்க தொல்லையே

ஆண்டவரின் இரக்கத்தால் கிடைத்தது கிருபையே

கிடைத்தது கிருபையே - காத்திருந்தேன்

2. தாவீது காத்திருந்தார் -யுத்தத்தில் ஜெயம் பெற

தானியேல் காத்திருந்தார் தரிசனத்தை அடைய

ஆண்டவரின் தயவினால் கிடைத்தது நன்மையே

கிடைத்தது நன்மையே - காத்திருந்தேன்

3.நாமும் காத்திருப்போம் -நம்பிக்கை உடனே

நல்லதை பெற்றிடுவோம் நல் மனதுடனே

ஆண்வரின் கிருபையால் சேர்ந்திடுவோம்

இராஜ்ஜியத்தில்

சேர்ந்திடுவோம் இராஜ்ஜியத்தில் - காத்திருந்தேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு