துதிப் பாடல்கள்

கைவிடமாட்டார் இயேசு

Kaividamaattaar Yesu

கைவிடமாட்டார் - இயேசு

கைவிடமாட்டார்

உன்னை மீட்ட நேசர் இயேசு

கைவிடமாட்டார் - 2

1. தாய் உன்னை மறந்தாலும்

அவர் உன்னை மறப்பதில்லை

தந்தை உன்னை வெறுத்தாலும்

அவர் உன்னை வெறுப்பதில்லை - 2

அவர் உன்னை வெறுப்பதில்லை ...

2. நீ அவரை விட்டுவிட்டால்

அவர் உன்னை கைவிடுவார்

நீ அவரைத் தேடினால்

அவர் உனக்குத் தென்படுவார் - 2

அவர் உனக்குத் தென்படுவார்...

3. ஆகாயத்து பட்சிகளை

ஆதரித்து போஷிப்பவர்

அனுதினம் உங்களையே

அரவணைத்து காத்திடுவார் - 2

அரவணைத்து காத்திடுவார்...

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு