கலங்காதே மனமே திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து
காத்திடுவார் தினமே - 2
- கலங்காதே
கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார் - 2
- கலங்காதே
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் - 2
- கலங்காதே
அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே - 2
- கலங்காதே