கலங்காதே இயேசு உன்னோடு வருகிறார்
தேவன் உன்னோடு பேசுகிறார்
கலங்காதே
வேதனை வனாந்தரத்தில் நீ நடந்து
வருகிறாயோ - 2
அன்பில்லா வரண்ட நிலத்தில் நீ தனிமையில்
தவிக்கிறாயோ - 2
கலங்காதே
கஷ்டங்கள் மீண்டும் மீண்டும்
உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ-2
பிரச்சனை வேதனை வியாதிகளும்
கண்ணீர் மல்கிட செய்கிறதோ -2
கலங்காதே
இயேசுவின் வல்லமை இன்றும்
மாறிடவே இல்லை - 2
அவரின் அணைக்கும் கரங்கள்
இன்றும் குறுகிப் போகவில்லை - 2