கலங்கும் மனிதனே இயேசுவை பார்
கலக்கம் நீக்கி ஆதரிப்பார்
அன்பின் தேவன் இயேசு இன்று
அன்புடன் உன்னை அழைக்கின்றார்
- அன்பின்
மனிதரை நம்பி சோர்ந்தாயோ
மனமுடைந்தே நீயும் அழுதாயோ
வாழ்வளிக்கும் அன்பின் வார்த்தையினால்
வாழ வைப்பார் இயேசு பயப்படாதே!
- அன்பின்
வியாதியால் வாடி வதைந்தாயோ
வாழ்க்கையே வெறுத்து போனாயோ
மனதுருகும் திருக் காயங்களால்
மகிழ செய்வார் இயேசு பயப்படாதே!
- அன்பின்
அவரை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கமடைந்து போனதில்லை
தேடுவோம் தேவனின் திருமுகத்தை
தேற்றிடுவார் இயேசு பயப்படாதே!
- அன்பின்