துதிப் பாடல்கள்

கல்வாரி மலைதனில் கஸ்திகள்

Kalvaari Malaidhanil Kasthigal

கல்வாரி மலைதனில் கஸ்திகள் அடைந்து

அகோர பாவிகளைத்தான்

மீட்க மரித்தார் அருமை இயேசு - 2

கடந்த காலம் தனில் நடந்த பாவத்தைப் பொறுத்தார் - 2

நீதியை காண்பிக்கும் பொருட்டாக - 2

நீதிபரர் தேவன் உதித்தார் நீதியை நிறைவேற்ற - 2

சிலுவையில் தொங்கி ஜீவனை விடுமுன் வேண்டுதல் செய்தார் - 2

பிதாவே இவர்களை மன்னியும் என்று - 2

பரிந்து வேண்டினாரே இயேசு பாவிகட்காக - 2

பாவ சாபம் தனில் இருந்து உன்னை மீட்டுக்கொள்ள - 2

பாதகனைப்போல் பாரினில் தோன்றி - 2

பாடுகள் பட்டனரே இயேசு பாவி உனக்காக - 2

சிலுவையில் உதிரம் சிந்தி ஜீவனைக் கொடுத்தார் - 2

ஜீவாதிபதியாம் இயேசு கோமான் - 2

அழைக்கிறார் பாவி வா நீ என்று அன்பின் தொளியோ -2

ஐந்து காய தழும்பைக் காட்டி அழைக்கிறார் உன்னை - 2

வா மகனே வா மகளே - 2

உன்னை இரட்சித்திடவே அடைந்தேன் காயமதைப் பாராய் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு