துதிப் பாடல்கள்

கல்வாரி சிலுவையில் நான் சிந்தின

Kalvaari Siluvaiyil Naan Sindhina

கல்வாரி சிலுவையில் நான் சிந்தின இரத்தம்

கண் முன்னே ஓடவில்லையா

நீ கண்மூடித்தனமாய் வாழ்ந்திடும்

வாழ்க்கையால் வேதனைகள் கூடவில்லையா

முன்னாளில் நீ செய்த பாவத்தினால்தான்

நான் மரித்தேன் நினைவில்லையா

இந்நாளில் நீ இன்று பின் மாற்றம் அடைந்திட

நான் உனக்கு பிடிக்கவில்லையா

பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்து

நித்தியத்தை நீ அடைய வேண்டும் என்று

சிலுவையைச் சகித்தேன் நிந்தைகளைச் சுமந்தேன்

அத்தனையும் மறந்தாய் நீயோ இன்று

எங்கோ பிறந்த உன்னை

என் மடியில் நான் வளர்த்தேன்

எடுத்தெறிந்து போனதென்ன

இப்போதும் உன்க்காய் காத்திருக்கும்

தகப்பனை நினையாமல் வாழ்வதென்ன

தோள்வலிகள் எடுக்க கால் பாதம் கடுக்க

கல்வாரி நோக்கி நான் நடந்த போது

உன் முகத்தை நினைத்தேன் உபத்திரவம் பொறுத்தேன்

உயிர் போகும் வரையிலும் ஒப்புக்கொடுத்தேன்

ஆனாலும் நீ இன்று வீணாக

மரித்திடவா நான் சிலுவை சுமந்தேன்

காணாமல் போயிருந்த ஆடான

உன்னைக்கண்டு ஓடோடி வந்து நிற்கிறேன்

ஆரம்பத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை நீ இழந்து

போர் முகத்தில் தோற்றதென்ன

நான் கொடுத்த வெற்றிகளை நீ கெடுத்துப் போட்டு

தேவன் மேல் தாங்கலென்ன

இஸ்ரவேலில் தேவனவர் இல்லையென்று நீ நினைத்தா

இங்கும் அங்கும் ஓடுகிறாய்

ஏராள மன்னிப்பை தாராளமாய் கொடுப்பேன்

இன்னும் ஏன் தயங்குகிறாய்.

இருப்பதோ ஒரு வாழ்க்கை

இனியில்லை மறு வாழ்க்கை

இப்பொழுதே திருந்திவிடு

இருந்தாலும் இறந்தாலும்

இயேசுதான் நிரந்தரம்

இதற்கென்று ஒப்புக்கொடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு