துதிப் பாடல்கள்

கல்வாரி சிலுவையில் நீர் சிந்தின

Kalvaari Siluvaiyil Neer Sindhina

கல்வாரி சிலுவையில் நீர் சிந்தின இரத்தம்

கண் முன்னே ஓடுகின்றதே

நான் கண்மூடிக்கொண்டு அந்த காலத்தை

நினைக்கையில் என் ஏக்கம் கூடுகின்றதே

முன்னாளில் நான் செய்த பாவத்தினால்தான்

நீர் மரித்தீர் என்று உணர்ந்தேன்

இந்நாளில் நான் இன்னும் உம்மோடு இசைந்திட

ஓடோடி வந்து நிற்கிறேன்

பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்து

நித்தியத்தை நான் அடைய வேண்டும் என்று

நிந்தைகளைச் சகித்தீர் சிலுவையைச் சுமந்தீர்

அத்தனையும் நினைக்கின்றேன் நானோ இன்று

ஆனாலும் நீர் அன்று தானாக முன் வந்து

எனை மீட்க மறந்திருந்தால்

காணாமல் போயிருப்பேன் வீணாய் மரித்திருப்பேன்

ஏனோ நீர் என்னை நினைத்தீர்

தோள்வலிகள் எடுக்க கால் பாதம் கடுக்க

கல்வாரி நோக்கி நீர் நடந்த போது

என் முகத்தை நினைத்தீர் உபத்திரவம் பொறுத்தீர்

உயிர் போகும் வரையிலும் ஒப்புக்கொடுத்தீர்

எங்கோ பிறந்த என்னை எடுத்தெறிந்து போடாமல்

உயிர் கொடுத்து வளர்த்தவரே

இங்கேயும் எனக்காய் காத்திருக்கும் இயேசுவை

தலைகுணிந்து பணிந்து கொள்வேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு