கரம் கூப்பி நான் வணங்குவேன்
உம்மை கைதட்டி நான்பாடுவேன்... - 2
இயேசுவே உமைநோக்கியே
விண்ணப்பம் நான் செய்கிறேன்
என் வேண்டுதல் நீர் கேட்பதால்... - 2
அப்பா என்றழைக்கும் உரிமை தந்தீர்
ஆவியோடு துதிக்க அபிஷேகித்தீர்... - 2
ஆயிரம் ஆயிரம் துதிகள் பாடியே
ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்... - 2
உலகத்தில் அமைதியை நான் தேடியே
துயரத்தால் கலங்கித்தவிக்கும் போது... - 2
ஆறுதலும் அமைதியும் உள்ளத்தில் தந்தீர்,
அன்பரே உம் நாமம் அடைக்கலமே... - 2
தாயைப்போல் என்னை அன்பால் அனைத்தீர்
தந்தையைபோல் தோளில் தூக்கிச்சுமந்தீர்!... - 2
வேதனை நோய்கள் யாவும் குணமாக்கினீர்
வாழ்நாள் எல்லாம் நன்மையால் நிறைத்திடுவீர்...-2