கர்த்தர் சபையே கர்த்தரின் சபையே
களிகூர்ந்து மகிழ்ந்திடுவாய்
கர்த்தராம் இயேசு தமது சபையை இதோ
சேர்க்க வருகின்றார் ஆ! ஆ
கறைதிரை முதலானவைகள் ஒன்றும்
இல்லாதது கர்த்தர் சபை
பரிசுத்தமும் பிழையற்றதுமான
மகிமையானது சபை ஆ! ஆ
இரட்சிக்கப்பட்டோரின் சங்கமே
கர்த்தரின் சபையாகும்
பரிசுத்தவான்களின் சங்கமே
தேவனின் சபையாகும் ஆ! ஆ
பரலோகில் பெயரெழுதியிருக்கிற
முதற்பேறானோரின்
சர்வ சங்கமாகிய சபையே
கர்த்தரின் சபையாகும் ஆ! ஆ
தேவன் தமது சுய இரத்தம் சிந்தியே
சம்பாதித்துக் கொண்ட
தமது சபையே நீதிமான்களின்
சங்கமாம் சபையாகும் ஆ! ஆ
சத்தியத்திற்கு தூணும் ஆதாரமும்
ஆனது கர்த்தர் சபை
ஜீவனுள்ள தேவனின் வீடாம்
கர்த்தருடைய சபை ஆ! ஆ 2
ஊழியங்களையும் ஆளுகைகளையும் பற்பல பாஷைகளையும்
பிரித்தெடுக்கப்பட்ட ஊழியர்களையும்
கொண்டது கர்த்தர் ஆ! ஆ
பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப் பெற்றதும்
திட அஸ்திபாரமானதும்
சீயோனில் வைத்த மூலைக்கல்லாகிய
கிறிஸ்துவே சபைத் தலைவர் ஆ ஆ
சபையின் தலைவராம் கிறிஸ்து இயேசுவைப்
பரிபூரணமாகவே
விசுவாசிக்கிறவன் எவனும்
பதறவே மாட்டான் ஆ! ஆ
கிறிஸ்து இயேசுவும் கல்லின் மேல்
கட்டப்பட்ட சபையை
பாதாளத்தின் வாசல்கள் எதுவும்
மேற்கொள்வதில்லை ஆ! ஆ
இந்தக் கல்லின் மேல் விழுகிறவன்
நொறுங்கி போவான்
இந்தக்கல் எவன் மேல் விழுமோ அவன்
நசுங்கியே போவான் ஆ! ஆ
கர்த்தர் தமது திரு சரீரமாம்
தமது சபைக்கு
அற்புதங்கள் குணமாக்கும் வரங்கள்
அதிகமாய் அளிக்கின்றார் ஆ! ஆ
கர்த்தரின் வருகையின் நாளானது
சமீபித்து வருவதால்
சபை கூடி வருதலை ஒருவருமே
விட்டு விடாதிருங்கள் ஆ! ஆ
மகா சபையாம் கர்த்தரின் சபையே
களிகூர்ந்து மகிழ்ந்திரு
மகிபனாம் இயேசுவின் திரு வருகையை
எதிர்நோக்கிக் காத்திரு ஆ! ஆ