கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்கள்
செய்வார் அவரை நம்பிடு
நாள்தோறும் உங்களுக்கு நன்மைகள்
செய்வார் அவரை உயர்த்திடு
1. பாவமில்லாதவரே உன் பாவம் போக்க
உலகத்தில் பிறந்தார்
பாவியான உன்னை மீட்க தன்
ஜீவனையே கொடுத்தார் -கர்த்தர்
2. வாழ்வில் வேதனை கொண்டிருந்தால்
வேந்தன் இயேசுவை நோக்கி பார்
அற்புதங்கள் செய்வாரே - உன்னை
அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் -கர்த்தர்
3. நேர்த்தியான நல்ல இடத்திலே
நலமாய் உன்னை வைத்திடுவார்
பாசம் கொண்டு உன் மேலே
பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் -கர்த்தர்