துதிப் பாடல்கள்

கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்

Kartharai Nambu Un Vaazhvu Maarum

கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்

கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும்

கவலை எல்லாம் கர்த்தரின் மேலே

வைத்திடு நீ கலங்காதே

எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார்

நீ கீழாகாமல் என்றும் மேலாவாய்

கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும்

ஆசீர்வாதம் அடைந்திடுமே

கூடையும் மா பிசையும் தொட்டியும்

ஆசீர்வாதம் அடைந்திடுமே

போகும் போதும் வருகின்ற போதும்

ஆசீர்வாதம் உன்னைத் தொடரும்

சத்துருவை என்றும் துரத்தும் தேவன்

உனக்கு முன்னே சென்றிடுவார்

கையிடும் எல்லா வேலைகள் அனைத்திலும்

கர்த்தரின் ஆசி உனக்கு உண்டு

பூமியில் வாழும் ஜாதிகள் எல்லாம்

உனக்குள் ஆசி பெற்றிடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு