கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்
கன்மலை தேவனை ஆராதிப்போம்
துதியின் மத்தியில் வாசம் செய்யும்
தூயவரை நாம் போற்றிடுவோம்
(பாடிடுவோம்... போற்றிடுவோம்
வாழ்த்திடுவோம்... வணங்கிடுவோம்)
யுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தர்
மகிமையாக வெற்றி சிறந்தார்... - 2
செங்கடல் பிளந்து வழியை தந்த
தேவாதி தேவனை ஸ்தோத்தரிப்போம்... -2
வானமும் பூமியும் படைத்தவரை
வல்லமை நிறைந்த ஆண்டவரை... - 2
வானத்தில் இருந்து இறங்கி வந்த
வான மன்னாவானவரை... - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறா
நித்திய இராட்சியம் உள்ளவரை... - 2
நிந்தைகள் சுமந்து மீட்டவரை
நித்திய வாழ்வுக்கு அழைத்தவரை... 2