கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே பாடுங்கள்.
கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி,
துதியைச் சொல்லுங்கள்.
அல்…. லே…லூ….யா -
அல்லேலூயா 2
ஜனங்களே பிரபுக்களே பாடுங்கள்
சிறியோரே பெரியோரே பாடுங்கள்
ஆனந்த சத்தத்தோடே பாடுங்கள்
வாத்தியங்கள் வாசிக்க பாடுங்கள்
வானங்களே களித்துப் பாடுங்கள்
பூமியின் குடிகளே பாடுங்கள்
அதிசயமானவரை பாடுங்கள்
இரட்சிப்பை உண்டாக்கினார் பாடுங்கள்