கருணைக் கடலே இயேசுவே கனிந்தே வாருமே
எனது நெஞ்சம் உம்மிலே என்றும் தஞ்சமே
அன்பான எம் தேவனே எம்
நெஞ்சிலே வாருமே - 2
எண்ணமெல்லாம் நீ நிறைந்தாய்
ஒளி ஏற்றும் தீபம் போல் - ஆ
உயிரானவா, உணவாகி வா - எம்
உள்ளத்தில் நிறைந்திட வா - 2
காலமெல்லாம் வழித்துணையாய்
வரவேண்டினோம் உம்மை - ஆ
வரவேண்டுமே, நல்லாயனே - 2
உம் மந்தையில் சேர்த்தருள்வாய் - 2