துதிப் பாடல்கள்

கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார்

Kasthigaladaindhaar Kasthigaladaindhaar

கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார் - 2

கர்த்தர் இயேசு கல்வாரியில் கஸ்திகளடைந்தார் - 2

கெத்செமனே தோட்டமதில் இரத்த வியர்வை சிந்தியே - 2

அன்று ஏதேன் - தோட்டமதில் - உயிர்கொண்ட - பாவமதை

அன்பின் தேவன் - இயேசு தாமே - முற்றிலுமாய்க் - கொன்றிடவே

அகோரமாம் கஸ்திதனைக் கெத்செமனேயில் தாம் அடைந்தார் - 2

பலவீனமான - மானிடரின் - பலவீனமெல்லாம் - போக்கிடவே

பலவீனத்தோடு - பச்சைப் பச்சை - இரத்தமதில் - கமந்து வீழ்ந்தார்

பலவானான எங்கள் தேவன் பயங்கரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2

சாபத்துள்ளான சந்ததியின் - சாபமெல்லாம் - நீக்கிடவே

சாபத்தீடான - சிலுவை தனில் - சர்வநாதன் - தொங்கி மரித்தார்

சர்வத்திற்கும் மேலான தேவன் சர்வ வல்லமையின் தேவன் - 2

சிரசினில் - முள்முடி சூட்டி - மூங்கில் தடியால் - அடிக்கப்பட்டார்

அழகுவாய்ந்த - முகந்தனிலே - அநேகரால் - துப்பப்பட்டார்

அருமை இயேசு அன்பு இயேசு அவனிதனில் கஸ்திகளடைந்தார் - 2

பாரமான - சிலுவை தன் - பாதகர்க்காய்த் - தாம் சுமந்தார்

சிலுவை சுமக்கப் - பலனில்லாமல் - சிலுவையிலே - தாம் விழுந்தார்

பாவி நேசன் பாவ நாசன் பரிதாபமாய்க் கஸ்திகளடைந்தார் - 2

சிலுவையுடன் - தரையில் வீழ்ந்து - எழும்பக்கூடாமல் இருந்தபோதும்

சிறிதுமே - இரக்கமின்றி - ஈனர்களால் - வதைக்கப்பட்டார்

சீர்மிகு தேவன் சீர்கெட்டோரால் சிறுமைப்படுத்தப்பட்டார் - 2

சிரேனே ஊரான் - சிலுவைதனைத் - தூக்கிடவே - மீண்டும் எழுந்தார்

சிரேனே ஊரானும் தாங்கிட - சிலுவைதனை மீண்டும் சுமந்தார்

சிலாக்கியமான பாக்கியமதனை ஆயத்தமாக்கக் கஸ்திகளடைந்தார் - 2

திருக்கரம் கால்கள் - தளர்ந்து நடுங்க - கொல்கொதா மலை யேறினார்

குருசினில் - திருக்கரங்கால்கள் - ஆணிகளால் - அறையப்பட்டார்

கொடுமையான பாடுகளைக் கர்த்தர் இயேசு தாமடைந்தார் - 2

சிலுவையில் - மூன்றாணிதனில் - வேதனையுற்று - துடி துடித்தார்

விலாவதிலே - ஈட்டியினால் - ஓங்கியே - குத்தப்பட்டார்

சாத்தானின் தலையதனைத் தகர்த்திடவே கஸ்திகளடைந்தார் - 2

அதிக பசி - தாகத்தினால் - கண்ணும் மிக குழி விழுந்தது

அழகு முகம் - அழுக்கடைந்து - முதுகோடு வயிறும் - ஒட்டியது

அன்பர் இயேசு அன்பின் இயேசு அகோரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2

பாவிகளின் - மன்னிப்புக்காய்ப் - பரிவுடனே வேண்டிக்கொண்டார்

பாவிகளைப் - பரிசுத்தமாக்க - பரிசுத்தர் இயேசு - இரத்தம் சிந்தினார்

பாவிகளைப் பரலோகம் சேர்க்க பரலோகின் தேவன் கஸ்திகளடைந்தார் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு