கவலைப்படாதே நண்பனே (4)
1. இன்றைக்கிருந்து நாளைக் கருகும்
புல்லை தேவன் உடுத்துவிக்கின்றார்
அதைக் காட்டிலும் அதிக மேன்மையான
உன்னை அவர் உடுத்துவியாரோ?
-கவலைப்படாதே நண்பனே (4)
2. சிறகை விரித்து வானில் பறக்கும்
பறவைகளுக்குப் பிழைப்பூட்டுகிறார்.
அதைக் காட்டிலும் விஷேசித்த உன்னை
பரமபிதா பிழைப்பூட்டாரோ?
-கவலைப்படாதே நண்பனே (4)
3.வனத்தில் வளர்ந்து பூத்துக் குலுங்கும்
மலர்களை தேவன் உடுத்துவிக்கின்றார்
அதைக் காட்டிலும் அதிக மேன்மையான
உன்னை அவர் உடுத்துவியாரோ?
4. ஒன்றைக் குறித்தும் நீ கவலை கொள்ளாமல்
உன் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும்
வேண்டுதலோடும் ஸ்தோத்திரத்தோடும்
தேவனிடத்தில் சொல்லிடுவாயே
-கவலைப்படாதே நண்பனே (8)