துதிப் பாடல்கள்

கிறிஸ்துவின் சேனைக்கு

Kiristhuvin Senaikku

கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை

முற்றும் நின்று போராட ஆள் தேவை

பற்று நீங்கி வெற்றி தேட ஆள் தேவை

சற்றும் அஞ்சா அன்புமிக்க ஆள் தேவை

சிலுவை கொடி நீ பிடித்து வா

இயேசு உனக்கு முன் செல்லுவார் வா

கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா

வெற்றி உனதே நம்பி நீயும் வா

சர்வாயுதம் அணிந்து கொண்டு வா

தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா

உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா

இயேசுவுக்காய் அதை கொடுக்க வா

1. உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா

உறவு நீங்கி பழி சுமக்க வா

புரட்சி செய்து புதுமைக் காண வா

உலகை கல்க்கி வெற்றி காண வா

(நாம்) வாழ்ந்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

தாழ்ந்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

உழைத்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

மரித்தால் நம் ஜீவன் கிறிஸ்துவுக்கு

2. எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா

எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா

தோல்வி கண்டு துவண்டிடாதே வா

இறுதி வெற்றி உனதே நம்பி வா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு