துதிப் பாடல்கள்

கிரியைகளைச் செய்தருள்வீர்

Kiriyaigalais Seydharulveer

கிரியைகளைச் செய்தருள்வீர் எங்கள் தேவனே

கிரியைகளைச் செய்தருள்வீர் உலகம் முழுதுமே

இயேசுவே உடனே கிரியை செய்தருள்வீர்

உலகம் முழுதுமே உம் கிரியைகளையே

இயேசுவே உடனே உம் கிரியைகளையே உலகெங்கும் செய்தருள்வீர்

அதிசயக் கிரியைகளை நீர் செய்தருள்வீரே

அற்புதக் கிரியைகளையும் நீர் செய்தருள்வீரே

பலத்த கிரியைகளை நீர் செய்தருள்வீரே

பயங்கரக் கிரியைகளையும் நீர் செய்தருள்வீரே

பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளையே

பராக்கிரமத்தோடு உடனே செய்தருள்வீரே

இரட்சிப்பின் மா வல்லமையான கிரியைகளையே

இயேசுவே உடனே உம் ராஜ்யத்திற்காய்ச் செய்தருள்வீரே

பொல்லா ஆவிகளின் கிரியைகள் அழிந்தொழியவே

நல்ல ஆவியினால் கிரியை செய்தருள்வீரே

குருடர்கள் உம் செயல்களைக் கண்டு மகிழ்ந்திடவே

நோய்கள் யாவும் குணமாகிடவே கிரியை செய்தருள்வீர்

செவிடர்கள் உமது புகழைக் கேட்டு மகிழ்ந்திடவே

ஊமையர் உம்மைப் பாடி மகிழவே கிரியை செய்தருள்வீர்

சப்பாணிகள் குதித்தெழுந்து உடனே நடந்திடவே

சம்பூரணமாயக் கிரியைகளைச் செய்தருள்வீரே

மரித்தோர் உடனே உயிரடைந்து எழுத்திடவே

மா உன்னதக் கிரியைகளைச் செய்தருள்வீரே

இதுவரையிலும் நடந்திரா மா பெரிய கிரியைகளையே

இயேசுவே உடனே உம் நாமத்தில் செய்தருள்வீரே

அற்புதம் அதிசயம் ஆச்சரியம் எங்கும் முழங்கவே

அடியார் பிரமித்து பூரிக்கவே கிரியை செய்தருள்வீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு