கோடா கோடி
நன்றி சொல்லுவேன் - 2
என்னை புழுதியிலிருந்து தூக்கி எடுத்து
குப்பையிலிருந்து உயர்த்தி வைத்து
ராஜாக்களோடு பிரபுக்களோடு
உட்கார பண்ணுகிறீர் என்னை - 2
1. தாழ்வில் என்னைக்கண்டவரே
தாயுமானவரே
தயவாய் என்னை நினைத்தவரே
தகப்பனானவரே - 2
என் மேல் கொண்ட நேசம்
அதுவே உந்தன் பாசம் - 2
2. ஏழை என்னுடன் இருந்தவரே
கூடப்பிறந்தவரே
ஏழ்மை நீங்க உதவினீரே
சொந்தமானவர் - 2
3. குறைவில் கூட இருப்பவரே
நண்பனானவரே
நிறைவாய் மாற்றி மகிழ்பவரே
கர்த்தரானரே - 2