துதிப் பாடல்கள்

கூடிச் சேருவீர்

Koodis Seruveer

கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்

உள்ளத்தில் இயேசுவின்பால்

அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2

கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)

1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும்

உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2

துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்

அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும்

2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்

விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2

அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார்

கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்?

3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும்

மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2

தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும்

இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு