குருசில் குருசில் குருசில் நேசரேமரிக்க
காரணம் தான் ஏனோ? 2
பாவம் பெருகின பாவிகள் மீது
கிருபை அதிகமாய்ப் பெருகினதாலோ ! - 2
பாவிகளை மீட்கவோ - மரித்தீர் - பாவிகளை மீட்கவோ - 2
பரலோக விட்டு பாரினில் வந்த
காரணம் ஏனோ கருணையின் தேவா
பாடுபட்டு மாளவோ - எமக்காய் பாடுபட்டு மாளவோ - 2
சாபமாகி சாவை அடைந்த
காரணம் ஏனோ கல்வாரி நாதா - 2
சாபமதை போக்கவோ - எமக்காய் சாபமதை போக்கவோ - 2
பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு
உன்னதனே நீர் மாண்டது ஏனோ - 2
எம்மையே இழுத்திடவோ - உம்மண்டை எம்மையே - 2
திருக்கரம் கால்களில் ஆணிகள் ஏற்று
திருஉதிரம் சிந்தக் காரணம் ஏனோ
பரலோகை ஈந்திடவோ - நரர்க்கு பரலோகை ஈந்திடவோ - 2
மகிமையின் தேவா மாசற்ற சீலோ
மாண்டோ எமக்காய் கல்வாரி குருசில் - 2
மகிமையைத் தந்திடவோ - நித்திய மகிமையைத் தந்திடவோ - 2