துதிப் பாடல்கள்

மகிமையின் தேவனே மன்னிப்பீரோ

Magimaiyin Devanae Mannippeero

மகிமையின் தேவனே மன்னிப்பீரோ

மாறாத நேசரே மறப்பீரோ (2)

1. அணைக்கும் கரங்கள் சிதைத்தேன் ஐயா ஆணிகளால்

அணைக்கும் கரங்களை சிதைத்தேன் ஐயா

அன்பரே என்னை மன்னிப்பீரோ (2)

2. சாய்ந்திடும் மார்பினை துளைத்தேன் ஐயா ஈட்டியினால்

சாய்ந்திடும் மார்பினை துளைத்தேன் ஐயா

அன்பரே என்னை மன்னிப்பீரே (2)

3. நடந்திடும் கால்களை அடித்தேன் ஐயா ஆணிகளால்

நடந்திடும் கால்களை அடித்தேன்

அன்பரே என்னை மன்னிப்பீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு