மைந்தனே துக்கப்படாதே
துன்பத்தைக் கண்டு
மைந்தனே துக்கப்படாதே
1.துன்பத்தில் இன்பமுண்டு
தொல்லையில் சொகுசும் உண்டு -2
நித்தியத்தில் மகிமையுண்டு
ஆனந்த பாக்கியமுண்டு -2
2.துன்பத்தின் மேல் துன்பமும்
தொல்லையின் மேல் தொல்லையும் -2
தொடர்ந்துன்னை வந்திட்டாலும் உன்
துணையாய் நான் இருக்கின்றேன்.
3. நீதிமானுக்கு வரும்
துன்பங்கள் அநேகமாகும் -2
என்றாலும் உன்னை யாவினின்றும்
விடுவிப்பேன் என் மைந்தனே
4. சுவிசேஷத்தின் நிமித்தம்
துன்பம் அனுபவிப்பது -2
என் திருச் சித்தம் என்பதை
என் மைந்தனே நீ அறிவாயே
5. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள்
தேவ பக்தியாய் நடக்க -2
மனதுள்ளோர் யாவரும்
துன்பப்படுவர் என் மைந்தனே
6.நீதியின் நிமித்தமாய் நீ
துன்பப்படுகிறதின் -2
பலனைப் பரலோகில்
பெறுவாய் என் மைந்தனே