துதிப் பாடல்கள்

மலைமீது பட்டணம் போல

Malaimeedhu Pattanam Pola

மலைமீது பட்டணம் போல

ஒளி வீச வைத்தாரே

இயேசு ராஜா நாமம் சொல்ல

என்னைத் தான் அழைத்தாரே

அலை போல துள்ளி எழுந்து

ஆர்ப்பரிக்கும் ஆராதனை

அனைவருமே ஒன்றாய் சேரும்

அபிஷேக ஆராதனை

அன்பான ஆண்டவர் அவரே

அல்லேலூயா அல்லேலூயா

அழகான வாழ்வை தந்தார்

அல்லேலூயா அல்லேலூயா

ஆதியும் அந்தமும் அவரே

அல்லேலூயா அல்லேலூயா

சந்தோஷம் என்றும் தருவார்

அல்லேலூயா அல்லேலூயா

கைப்பிடித்து என்னை

நடத்திக் கொண்டு வந்தார்

கஷ்டத்தை மாற்றி என்

கவலையெல்லாம் தீர்த்தாரே

ஆழத்தை நோக்கி போ

என்று சொன்னார்

கரை சேரும் போது என்

வாழ்க்கை மாற்றி விட்டாரே

யூத சிங்கக்குட்டிகளோ

தாழ்ச்சி என்றும் அடைவதில்லை

நமக்கு ஏசு கொடுப்பதையே – அதை

யாரும் தடுத்து நிறுத்த முடியாதே

இயேசுவுடன் நானே

பயமேதும் இல்லை

எப்போதும் என் கூடவே

வழியில் துணையாய் வருவாரே

என் ஆசை அவரே என் வாழ்வும் அவரே

இரவெல்லாம் என்னைக் காக்கும்

கண்ணுறங்கா என் தேவனே

மேகத்தாலே என்னை முடி

காத்துக் கொண்ட அற்புதரே

என் பாட்டுக்கெல்லாம் ராகம் தந்து

ஆராதிக்க வைத்தவர் அவர் தானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு