மனம் திரும்பாயோ மானிடனே,
இந்த மாய உலகின் பாவம் மறந்து... - 2
மனுக்குலத்தை மீட்க வந்த,
மீட்பர் இயேசுவின் அன்பறிந்து
கண்மூடிக் கருவினிலே உருவாகும் நேரத்திலே
உன்தாயும் உன்னை காண நேரத்திலே... - 2
அவயம் ஒவ்வொன்றும் உறுவேற்றப்படும்போது
அவயம் தந்தவரை அவனியில் நீர் அறிந்து
பட்டம் படிப்புகளும் சேர்த்த பணம் பொருளும்
உன்னோடு வருவதில்லை மரிக்கும் நேரத்திலே... - 2
இரட்சிப்பு ஒன்றிருந்தால் இரட்சகரை நீ காண்பாய்
இன்றே இரட்சண்ய நாள் உணர்ந்து மனம் திரும்பு
நோயின் கொடுமையினால் கைகால்கள் செயலிழந்தால்
உன் கண்ணில் கண்ணீரை யார் தான் அறிவாரோ... - 2
கண்ணீரைக் கண்டவரும் கரத்தில் வரைந்தவரும்
இன்று உன்னை அழைக்கின்றார் அவரிடம் வந்துவிடு