துதிப் பாடல்கள்

மனமே கலங்காதே உன்னை

Manamae Kalangaadhae Unnai

மனமே கலங்காதே உன்னை காண்கின்ற தேவன்

உன்னோட இருக்க உள்ளமே வருந்தாதே - 2

உள்ளமே வருந்தாதே - மனமே

கடைசிவரை கரம்பிடிப்பேன் என்று சொன்னவர்

மறந்தாரா - இல்லை

உயிருள்ளவரை நான் உடன் வருவேன்

என்று சொன்னவர் பிரிந்தாரா

யார் மறந்தாலென்ன யார் பிரிந்தாலென்ன

இயேசு உன்னை பிரிவதில்லை

உள்ளங்கையில் உன்னை வரைந்திட்ட தேவன்

உன்னை என்றும் மறப்பதில்லை உன்னையே மறப்பதில்லை

காகங்களை கவனித்து பாரு அவைகள் விதைக்கிறதா ?

மலர்களை நீ சிந்தித்துப்பாரு அவைகள் நூர்கின்றதா

அவைகளைக்கூட பிழைப்பூட்டும் தேவன்

உன்னையே மறப்பாரா மலருக்குகூட உடை தரும் தேவன்

உன்னையே விடுவாரா -

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு