மன்னவனே அன்புருவே - எனையாளும் இயேசுவே . .
உமதன்பை நான் மறந்தால் . . உலகினிலே .
எனை நினைப்பது . . யாரோ . .
ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா
மறவாமல் உமைப்பாடும் வரம் தாரும் இயேசையா இயசையா - 3
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர்
அழகே உம்மைப்போல் எவருமில்லை
நீ எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம்
என் வாழ்வை மாற்றித் தந்தது உம் வேத வாக்கியம்
உமக்கே நன்றி சொல்வேன் . நான் - 2 -
தண்ணீர் நிறைந்த நதி ஓரம் தங்கும்
வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே
நீர் மட்டும் இல்லையென்றால் எப்போதோ மரித்திருப்பேன்
மண்ணோடு மண்ணாய் மாறி
மறைந்தே போயிருப்பேன் - என்னை மீட்டவரே
உமக்கே நன்றி சொல்வேன் - இயேசையா -
எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்
நீர் செய்த நன்மைகளை சொல்லக்கூடுமே
உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர்
கருவரையில் தெரிந்து கொண்டு இதுவரையில் சுமந்தவர்
உமக்கே நன்றி சொல்வேன் . . . நான்