துதிப் பாடல்கள்

மன்னிப்பே பூர்ண

Mannippe Poorna

மன்னிப்பே பூர்ண மன்னிப்பே தந்தார் என்

தன்னையே குருசினில் தயவாக ஈந்ததால்

என் பாவங்கள் எத்தனை எண்ணமுடியுமோ

கண்ணே எந்தன் காதலா கருணையாய் மன்னித்தீர்

அன்பரின் மா அன்பை யான் என்ன வென்றுரைப்பேன்

பொற்பதம் என்றென்றும் போற்றியே ஜீவிப்பேன்

எரியுதே என் இருதயம் உருக்கிடும் அன்பினால்

பெருகிடும் நன்றியைத் தெரிவிப்ப தெலவ்விதம்

என் உடல் என் ஆவியும் ஏகமாய் யாவையும்

மன்னவா படைக்கிறேன் மகிழ்ந்தே உம் பாதத்தில்

அல்லேலூயா ஸ்தோத்திரமே அல்லல்கள் நீங்கிற்றே

செல்வேனோ பாவத்தில் சேயன் நான் என்றைக்கும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு