மண்ணோரும் அறியா நாளினிலே
விண்ணோரும் நினையா நாளினிலே
கண்ணிமை நேரத்தில் நடந்திடும்
அண்ணல் இயேசுவின் வருகையும்
மேகத்தில் மன்னன் வந்திடும் நாள்
வேகமாக இன்னும் நெருங்கிடுதே
வானிலத்தோர் சூழ வந்திடுவார்
நானிலத்தோர் எல்லாம் கண்டிடுவார்
நோவாவின் காலத்தின் நாட்களைப் போல்
லோகத்தின் முடிவில் நடந்திடும்
போவாரே பக்தர்களெல்லாம்
மோசம் போனால் விடப்படுவாயே
புத்தியுள்ள ஐந்து கன்னியர் போல்
பத்திரமாய் ஜெபத்தில் நிலைத்திரு
நித்திரை விட்டு எழும்பியே
பக்தியுடன் வேகம் எதிர்ப்படு
லோத்தின் நாட்களின் மக்களைப் போல்
லோகத்தில் ஆசையைப் பற்றிடாதே
போராடு கடைசி மட்டும்
சோராது நிதமும் காத்திடு