துதிப் பாடல்கள்

மறவாதே நண்பனே

Maravaadhae Nanbanae

மறவாதே நண்பனே மறவாதே நண்பனே (2)

1. வேதத்தின் வார்த்தையை

நீ அறிந்தால் போதாது (2)

அறிந்து அதின்படி வாழ்ந்திட வேண்டும் (2) -மறவாதே நண்பனே

2. உன்னிடத்தில் உள்ளதை இயேசுவுக்காய் கொடுத்திடு

கொடுத்து ஊழியம் செய்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே

3. இலவசமாய் நீ பெற்ற இயேசுவின் கிருபையை

அனைவருக்கும் இலவசமாய்

கொடுத்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே

4. உலகத்தின் பாடுகள் உன்னை என்ன செய்திடும் (2)

அதற்குப் பயந்து நீ

வாழ்ந்தது போதும் (2) -மறவாதே நண்பனே

5. திறந்த வாசல் இப்பொழுது

உனக்கு முன்னே உள்ளது.

அடைபடுமுன் கிறிஸ்துவை

அறிவிக்க வேணும் (2) -மறவாதே நண்பனே

6. நிச்சயமாக ஓர் நாள்

மரணம் உன்னை சந்திக்கும்

அதற்குமுன் இயேசுவுக்காய் ஆயத்தமாகு (2) -மறவாதே நண்பனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு