துதிப் பாடல்கள்

மத்தளம் கொட்டிட

Mathalam Kottida

மத்தளம் கொட்டிட உம் மாளிகைக்கு வரவேற்பீர்

மோட்ச வீட்டிலே உம்மோடு சேர்ந்து வாழ

காணுவேனே என் இயேசுவையே

கண்ணீர் யாவையும் அவர் துடைப்பாரே

புழுதியாய் போவேனோ புகலிடம் நீர் இருக்க (2)

மண்குழியில் விட்டிடாமல்

மகிமையில் என்னை சேர்பவரே

மாய உலகை விட்டு நானும்

மன்னர் இயேசுவை காண்பேனே

மரணத்தை ஜெயித்து எழுந்தவரே

உம்மை நம்பினோர் மாண்டதில்லையே

எக்காளத்தொனி கேட்கும் நேரம்

நாமும் மறுரூபமாகிடுவோம்

ஏகிடும் சீயோன் நகரில் நாமும்

ஏகமாய் ஒன்றாய் சேர்ந்திடுவோம்

ஏதேனின் வாசனோடு ஏழை நானும்

நீடுழி வாழ்வேனே நித்திய காலமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு