துதிப் பாடல்கள்

மௌனமாக இருந்த என்னை பேச

Maunamaaga Irundha Ennai Pesa

மௌனமாக இருந்த என்னை பேச வைத்தீரே

மெல்ல மெல்ல மனதின் துயரை சொல்ல வைத்தீரே

மென்மையான ஜெபத்தினால் நான் உம்மை கண்டேனே

மாண்டீடாமல் மன்னித்து மறுவாழ்வு தந்தீரே

மெல்லிய மழைத்துளியினை மேகங்கள் தருவதுபோல்

மகிழ்ச்சியை தந்தீரென் மனதிற்குள்ளே

மனிதர்கள் பேசும் வார்த்தை மலர் போல் வாடிடுமே

மன்னவா உம் வாக்கோ மங்காத சுகம் தருமே

மரணம் என்னை உம்மை விட்டு பிரிக்கக்கூடுமே

உம் மகுடத்தில் மாணிக்கமாய் என்றென்றும் ஜொலித்திடுவேன்

கானல் நீரினால் தாகம் தீர்ந்திடாமல்

நீரோடை தேடினேனே மான் போலே

கன்மலை பிளந்து தண்ணீர் தந்தவரே

காற்றிற்கு மறைத்து குகைதனில் காத்தீரே

உலர்ந்து போன எலும்பாக இருந்த என்னையும்

ஒன்று சேர்த்து மனிதனாக உயிரடைய செய்தீரே

உம்மிடம் வருவதற்கு எத்தனை தடைகளோ

என்னென்ன நெருக்கங்களோ நடுக்கங்களோ

வாய்மொழி வார்த்தை கேட்டு விடுதலை தந்தவரே

வயதிற்கும் மேலான வாஞ்சைகள் தந்தீரே

வருத்தத்தின் அப்பத்தை படைத்த என்னையும்

வானத்தின் மன்னாவால் தினம் தினம் போஷித்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு