துதிப் பாடல்கள்

மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே

Meendum Meendum Thottu Paarppenae

மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே

இயேசுவே உம் பிம்பம் என் இன்பமே

மனக்கண்கள் முன்னால் மலர்ந்திட்ட அழகே

மலர்போல மனதை வருடிடும் அழகே

மங்காமல் மிளிர்ந்திடும் மணவாளா உம்மைத்தானே

ஒவ்வொரு நாளும் என்னோடு நீர் வந்து

பேசிட வேண்டும் பழகிட வேண்டும்

சோர்ந்திடும் போது உம் கரம் வைத்து

தேற்றிட வேண்டும் தழுவிட வேண்டும்

மார்போடு சாய்த்து தாலாட்ட வேண்டும்

மடி மீது அமர்த்தி சீராட்ட வேண்டும்

உம்மிடம் எல்லா உரிமையும்

முழுவதுமாய் பெற்ற முதல் மணவாட்டியாய்

என்றென்றும் நீங்காமல் என்னோடு நீர்வந்து

உறவாட வேண்டும் உறவாக வேண்டும்

நடந்திடும் போது மூடியே மறைத்திடும்

நிழலாக வேண்டும் நிஜமாக வேண்டும்

என் வாயின் வார்த்தைகள் நிறைவேற வேண்டும்

என் வாழ்வோ தாழ்வோ நீர் மட்டும் வேண்டும்

உள்மன வாஞ்சைகள் கேட்டிடும்

உத்தம நேசனே உயிர் மணவாளனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு