முடியாத காரியம் ஒன்றுமில்லை
எட்டாத நாட்கள் என்றெதுவும் இல்லை - உமக்கு
அகிலலோகத்தை ஆள்பவரே உம்மாலே எல்லாமாகும் - - 2
ஐம்பூதங்களையும் ஆளுகை செய்கின்ற அதிகாரம்
உம் கையிலே இயேசையா அற்புதம் நடக்குது - 2
சின்னவனை ஆயிரமாய் மாறச்செய்கின்றீர்
சிறியவன் பலத்த ஆயுதமாவான் - 2
கர்த்தராகிய நீர் ஏற்றகாலத்தில்
இதை தீவிரமாக செய்து முடிப்பீர் – 2
யேகோவா தேவனையே ஆராதிப்பேன்
யெஷிவா கர்த்தரையே அறிக்கையிடுவேன் - 2
உயிருள்ள நாட்களெல்லாம் ஏலோயீம்
தேவனையே வணங்கிடுவேன் - 2
ஆபிரகாமின் தேவனே என்னை ஆசீர்வதியும்
தாவீதின் கர்த்தரே ஆளுகை செய்யும் - 2
யாக்கோபின் ஊற்றானது தானியமும்
திராட்சரசமும் குறையே இல்ல - 2
கர்த்தரே பெரியவரும் துதிக்கதக்கவர்
எல்லா தேவர்களில் உயர்ந்திருக்கிறீர் - 2
அகிலலோகத்தில் நீர் உயர்ந்த தேவனே
எல்லா நாமத்திலும் மேலானவர் – 2