முத்துமணி பாலகனே - எங்கள்
மன்னவனே கண்ணுறங்கு
விண்ணும் மண்ணும் ஆளுகின்ற
எங்கள் முன்னவனே நீ உறங்கு
இருளான இந்த உலகில் ஒளியாக உதித்தாயே
பாவமதை போக்கிடவே இந்த மண்ணில் வந்த ரட்சகனே
என் மனதை ஆளவந்த எங்கள் இணையில்லா நாயகனே -
மாடு கட்டும் தொழுவத்திலே - உடல்
வாட்டுகின்ற குளிரினிலே கந்தல் துணி அணிந்தவராய்
எந்தன் கர்த்தரை நான் காணுகின்றேன்
பரலோகம் துறந்து விட்டீர் ஏழை என்னில் பிறந்துவிட்டார் - 2
மனதினிலே உம்மை சுமப்பேன் மன்னாநீர் உறங்குமையா - 2
பரமபிதா மடியினிலே செல்லப் பிள்ளையாய் இருந்தவரே
ஏழை எந்தன் மடி தேடி
இந்தப் பூவுலகில் வந்ததும் ஏன்
பஞ்சு மெத்தை படுக்கை இல்லை
தாலாட்ட தொட்டிலும் இல்லை
ஆரிராரோ பாடிடவும் தாதியர்கள் எவருமில்லை
கர்த்தாவே உம்மை கையிலெடுப்பேன்
தாலாட்டி மகிழ்ந்திடுவேன்